வியாழன், 10 ஜூன், 2010

பிறந்தநாள்

என் வாழ்கைப்பாதையை
மாற்றிப்போனவள் என
வசைபாட மாட்டேனடி
ஒற்றை வழிப்பாதையில் போன எனக்கு
ஓராயிரம் பாதைகள் தந்தவள் -நீ
இருக்கும் வரை உன்
பாதை மட்டும் என்பாதை
இன்று
என்னை சுற்றிலும் ஒரே வெளி
இல்லை இல்லை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழி
பாதைகளில் பயணித்த -நான்
பயணிப்பதெல்லாம் பாதையாகும்
சூட்சுமம் புரிய வைத்தவள்
சில நீதிகளையும்
புரிய வைத்துவிட்டாய்
மறைந்த தலைவர்கட்க்கு பிறந்தநாள்
கொண்டாடும் தேசத்தில்- எனை
மறந்த உன்னையும் கொண்டாடுதல்
தவறில்லை என்று..